மீண்டும் ஊரடங்கு?முதல்வர்களிடம் யோசனை கேட்கும் மோடி

 

மீண்டும் ஊரடங்கு?முதல்வர்களிடம் யோசனை கேட்கும் மோடி

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு பொறுப்புகள் அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் சூழல் உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது.

மீண்டும் ஊரடங்கு?முதல்வர்களிடம் யோசனை கேட்கும் மோடி

வேறு சில மாநிலங்களிலும் கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகின்றன. கொரோனா சூழலை சமாளிக்க உங்களின் பரிந்துரைகளை வழங்க வேண்டும். கொரோனா முதல் அலையை கடந்துவிட்டோம், தற்போது 2 ஆவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும்.கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் சாதாரணமாக இருப்பது கவலை அளிக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தளர்வடைந்துவிட்டது. அனைத்து சவால்களும் இருந்தபோதிலும் முன்பை விட சிறந்த வளமும், அனுபவமும் நம்மிடம் உள்ளது.” எனக் கூறியுள்ளார்.