முதல்வருடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

 

முதல்வருடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று முதல்நாள் நள்ளிரவு 2 மணிக்கு மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இந்த புயல் கடலோர மாவட்டங்களையும் புதுச்சேரியையும் கடுமையாக தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளில் களமிறங்கியது. மக்களை முகாம்களில் தங்க வைப்பது, முன்கூட்டியே மரங்களை வெட்டுவது, பேரிடர் மீட்புக் குழுவை வரவழைப்பது, நீர் வெளியேற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் தமிழகத்திற்கு பெரிதாக பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படவில்லை.

முதல்வருடன் தொலைப்பேசியில் உரையாடிய பிரதமர் மோடி

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று இரவு 9 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.