• March
    31
    Tuesday

Main Area

Main



மருத்துவர்கள் கடவுளின் அவதாரங்கள்.... அவர்களை துன்புறுத்தினால் போலீஸ் நடவடிக்கை பாயும்... மோடி எச்சரிக்கை

சுகாதார பணியாளர்கள்
சுகாதார பணியாளர்கள்

நேற்றுமுன்தினம் நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை அறிவித்த பிரதமர் மோடி நேற்று வாரணாசி தொகுதி மக்களிடம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசினார். அப்போது மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நெருக்கிடியான இந்த நேரத்தில் வெள்ளை கோட்டுகளில் (மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள்) கடவுள்களின் அவதாரங்கள். இன்று அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து பல்வேறு உயிர்களை காப்பாற்றுகிறார்கள்.

பிரதமர் மோடி

சீனாவின் வுஹானிலிருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்காக மருத்துவர்கள், மீட்பு பணியாளர்கள் சென்றனர். உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இந்தியர்களை திரும்ப பெறும் நடவடிக்கைகளில் ஏர் இந்தியா மற்றும் இதர பணியாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள்தான் நம்முடைய கதாநாயகர்கள். அவர்கள் துன்புறுத்தப்படுவதாக வந்த செய்திகளை கேட்டபோது நான் அதனை தீவிரமாக எடுத்துக் கொண்டேன். 

மகாபாரத போர்

இது எனக்கு கடுமையான பிரச்சினை. அவர்களை துன்புறுத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளேன். மகாபாரத போர் 18 நாளில் வெற்றி பெற்றது. கொரோனா வைரசுக்கு எதிரான போர் 21 நாட்களில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

2018 TopTamilNews. All rights reserved.