மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி ஜாலி போட்டோ ஷூட்!!

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மோடி ஜாலி போட்டோ ஷூட்!!

பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார பயணமாக தமிழகத்துக்கு வந்துள்ளார். மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, பிரார்த்தனை மேற்கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வழிபாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Image

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வேட்டி, சட்டையுடன் சென்ற மோடி ஆங்காங்கே நின்று பயங்கர போஸ் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள், கோவிலில் என்ன போட்டோஷூட் என கலாய்த்துவருகின்றனர்.

Image

பிரசாரத்துக்காக கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு புறப்பட்ட பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வு எடுக்க சென்றுவிட்டார்.

Image