ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்! – ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு

ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்! – ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு

வருகிற 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்குகிறது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல்நட்டுகிறார் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொருளாளர் அறிவித்துள்ளார்.

ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்! – ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தீர்ப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால், இதுவரை அங்கு கோவில் கட்டும் பணி தொடங்கவில்லை. ஊரடங்கு, சீன தாக்குதல் என்று பல்வேறு காரணங்களால் கோவில் கட்டும் பணி தடைப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் கட்டுமானப் பணியை எப்போது தொடங்கலாம் என்று ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா

ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்! – ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு

அறக்கட்டளை கடந்த வாரம் கூடி ஆலோசனை நடத்தியது. இதில் ஆகஸ்ட் 5ம் தேதி நடத்துவது என்றும், இதில் பங்கேற்க பிரதமர் மோடியை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டதாக செய்தி வெளியானது.

ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்! – ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிவிப்பு
இந்த நிலையில் ஶ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “வருகிற 5ம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்குகிறது. பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். சமூக இடைவெளியை உறுதி செய்ய இந்த நிகழ்ச்சியில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இதில் 150 பேர் பொது மக்கள்” என்றார்.