பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: என்னென்ன தெரியுமா?

 

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: என்னென்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14ம் தேதி சென்னை வந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் கோவை வந்திருக்கிறார். அன்று அரசு முறை பயணமாக சென்னை வந்த அவர் இன்று பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருப்பதால், அவரின் அடுத்தடுத்த நகர்வுகளை எதிர்க்கட்சிகள் பீதியுடன் உற்று நோக்குகின்றன.

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: என்னென்ன தெரியுமா?

இந்த நிலையில் கோவையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பங்கேற்ற அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகளை திறந்து மோடி வைத்தார். திருப்பூர் வீரபாண்டியில் 1,280, திருக்குமரன் நகரில் 1,248, திருச்சி இருங்களூர், மதுரை ராஜாங்கோரில் தலா 1088 குடியிருப்புகள் இத்திட்டத்தின் கீழ் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: என்னென்ன தெரியுமா?

இதைத் தொடர்ந்து, ஈரோடு கீழ்பவானி கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். தமிழகத்தில் 9 ஸ்மார்ட் சிட்டிகளின் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். அதோடு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கோவை சேலம் உள்பட 9 நகரங்களில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை 5 மெகாவாட் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கவும் அடிக்கல் நாட்டினார். தண்ணீரை வீணாக்காமல் அவற்றை முழுமையாக பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.