விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’

 

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’

உலக அரசியல் வரலாற்றில், தலைவர்களின் ஆடை விஷயங்களில் அதிகம் புகழப்பட்டவர் என்ற பெருமைக்குறியவர் யார் தெரியுமா..? பாரதப் பிரதமர் ‘மோடி’தான். ஒருகாலத்தில் அமெரிக்க அதிபரும், இங்கிலாந்து இளவரசரும்தான் ஆடைகள் விஷயத்தில் அதிகம் பேசப்பட்டனர்.இந்தியாவைப் பொறுத்தமட்டில் முன்னாள் பிரதமர் நேரு தனது சட்டையில் வைத்திருந்த ‘ரோஜாப்பூ’ பிரபலமாக பேசப்பட்டது.ஆனால் அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி இருக்கிறார் மோடி. அவரது உடையலங்காரத்தை பற்றி அமெரிக்கா. தென்கொரியா, பிரேசில், ஆஸ்திரேலியா, சீனா என பல நாட்டு அதிபர்களும் வியப்பு தெரிவித்துள்ளனர்.

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’
விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’


மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அவர் அணிந்திருந்த உடைகளைப் பார்த்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் ‘‘இந்த உடைகளை எப்படி தைக்கிறார்கள்?’’ என்று ஆச்சரியமாகக் கேட்டனர். மோடியிடம், ஒபாமா, ‘‘எனக்கும் இது போல குர்தா–பைஜாமா அணிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது’ என்றாராம்.

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’


தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், டெல்லி வந்த போது பிரதமர் மோடியின் ‘குர்தா உடையைப் பார்த்து “இந்த உடையில் நீங்கள் மிகக் கம்பீரமாகத் தெரிகிறீர்கள்” என்றார். அவர் ஊருக்குப் போனதும், அவரது முகவரிக்கு பிரதமர் மோடி 4 குர்தா உடைகளை அனுப்பி வைத்தார். அவற்றை அணிந்து மூன் ஜேன் இன், டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படங்கள் உலகம் முழுவதும் பேசப்பட்டன.
பிரேசில் நாட்டில் நடந்த ‘பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள்’ மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடியை பார்த்து, அந்நாட்டு ஜனாதிபதி ‘தில்மா ரவுசெப்’ மோடியிடம், ‘‘இந்த மாநாட்டுக்கு வந்துள்ள உலகத் தலைவர்களில் உங்கள் உடைதான் மிக, மிக நேர்த்தியாக வும் அழகாகவும் உள்ளது’என்று பாராட்டினார். இதை அந்த நாட்டு பத்திரிகைகள் செய்தியாகவே வெளியிட்டிருந்தன.இதே போல் ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த போதும் மோடியின் உடையை கண்டு, அங்குள்ள இந்தியர்கள் ஆரவாரம் செய்தனர்.
2014-ல் மோடி அமெரிக்கா சென்றபோது அவரது ஆடை அலங்காரம் பற்றி அங்குள்ள ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நாளிதழ்கள் செய்திகள் வெளியிட்டன. பிரதமர் மோடி அணியும் உடையை, “உலகத்தின் புது நாகரீக அடையாளம்” என ‘நியூயார்க் டைம்ஸ்’ வர்ணித்து எழுதியது. ‘‘வால் ஸ்டீரிட்’ பத்திரிகை, ‘‘இந்தியாவின் மிகச் சிறப்பான உடை உடுத்தும் பிரதமர்’ என்ற தலைப்பில் மோடி பற்றி கட்டுரையே எழுதியது.

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’


பிரதமர் மோடிக்கு முற்றிலும் எதிரானவர் மம்தா பேனர்ஜி. ஆனால் கட்சி, கொள்கை வேறுபாடுகள் தாண்டி, வருடா வருடம் முக்கிய பண்டிகைக்கு மோடிக்கு அவர் குர்தா வகை ஆடைகளை அன்பளிப்பாக வழங்குகிறார். இதன மோடியே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “மம்தா பேனர்ஜி எனக்கு வருடா வருடம் குர்தா அனுப்புவார். அவரை நான் சகோதரியாக மதிக்கிறேன்” என மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி குறிப்பிட்ட இந்த வகை ஆடையைத்தான் அணிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அல்ல. இந்திய மாநிலங்கள், வெளி நாடுகள், நிகழ்ச்சிகளின் தன்மையைப் பொறுத்து ஆடைகளைத் தேர்வு செய்வார்.ஆனால் பெரும்பாலும் குர்தா–பைஜாமா உடையையே மிகவும் விரும்பி அணிகிறார். மோடி அணிவது காதி, காதி சில்க், லினன் ஆகிய மூன்று வகைத் துணிகள் ஆகும். பல சமயங்களில் இந்தத் துணிகளை அவர் வெளியூர் போகும்போது மொத்தமாகவே வாங்கி விடுகிறார். ‘ஒரு சமயத்தில் ஒரு டஜன் குர்தாக்கள்’ என்ற வகையில், ஆண்டுக்கு மூன்றுமுறை மொத்தமாக தைத்துக் கொள்கிறார்.
வழக்கமாக எல்லோரும் முழுக்கை குர்தா உடைதான் அணிவார்கள். ஆனால் மோடி அரைக்கை குர்தா அணிகிறார். இது பற்றி அவரே சொல்லியிருக்கிறார். ‘ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பில் சேவகனாக இருந்தபோது ஊர் ஊராகச் சுற்றுவேன். ஒரு துணிப்பையில் ஆடைகளை வைத்துக்கொண்டு அலைவேன். நீளக்கை குர்தாக்களை துவைப்பது சிரமம். பையிலும் இடம் அடைக்கும். எனவே அரைக் கைக்கு மாறினேன்.அதுவே பின்னர் பழகி விட்டது’ எனக் கூறியிருக்கிறார்.

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’


பிரதமர் மோடி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு விதமான ஆடை அணிபவர். ஒரு நாளைக்கு 3 நிகழ்ச்சிகள் இருந்தால் அவை மூன்றிலுமே வேறு மாதிரியான உடைகளுடன்தான் காட்சியளிப்பார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது பச்சை நிற குர்தா அணிந்திருந்தார். இந்தியாவின் 68–வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது, வெள்ளை குர்தா அணிந்து தேசியக்கொடி நிறத்தில் தலைப்பாகை அணிந்து வந்து நாட்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார். தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி உடுத்தி வந்து அசத்தினார். மதச்சாயம் எனக் கருதி சமீப காலமாக அவர் காவி உடை அணிவதில்லையாம்.
மோடி அணிவது “பந்தகாலா’ ரக ஆடைகள் ஆகும். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரும் இதே ‘பந்தகாலா’ ரக ஆடையைத்தான் அணிந்தனர்.ஆனாலும் இதனைப் பிரபலப்படுத்தியது பிரதமர் மோடிதான்.தற்போது ‘பந்தகாலா’ ரக ஆடைகள், ‘மோடி குர்தா-ஜாக்கெட்’ என்றே அழைக்கப்படுகின்றன. இந்த பந்தகாலா உடைகளை மோடி அணிய ஆரம்பித்த பிறகு நாடு முழுவதும் இத்தகைய குர்தா உடைகளின் விற்பனை அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் ‘காதி இந்தியா’ நிறுவனத்திற்கு டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், போபால், மும்பை, எர்ணாகுளம் என 7 பெரு நகரங்களில் கிளைகள் உள்ளன. இந்த கடைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 1,400 ‘மோடி குர்தா-ஜாக்கெட்’ விற்பனையாகின்றனவாம்.
மோடி தனது ஆடைகளுக்கு மட்டுமே லட்சக் கணக்கில் செலவு செய்கிறார் என்பது தவறான தகலவாகும். பிரதமர் மோடியின் மார்பளவு 50 செ.மீ ஆகும். அவர் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பதால் இந்த அளவு மாறுவதே இல்லையாம். தனது குர்தா உடைக்கு சுமார் 2.5 மீட்டர் துணி எடுக்கிறார்.இதனைத் தைப்பது, இஸ்திரி போடுவது பேக்கிங் செய்வது என ரூ 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை அவர் செலவு செய்கிறார்.

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’


அகமதாபாத்தில் இருக்கும் ஜிதேந்திர சவுகான், பிபின் சவுகான் சகோதரர்கள்தான் மோடிக்கு கடந்த 24 ஆண்டுகளாக ஆடைகள் தைத்துத் தருகிறார்கள் “1989-ம் ஆண்டில் இருந்து மோடி வாடிக்கையாளராக இருக்கிறார்,” என்கிறார் பிபின். மோடி அணியும் குர்தாக்களை ‘மோடி குர்தா’என்ற பெயரில் தனி பிராண்ட் ஆக பதிவு செய்து இப்பொழுது மாதம் 2 ஆயிரம் மோடி குர்தாக்களை அவர்கள் விற்று வருகிறார்கள் குறைந்த பட்ச விலை. ரூ 3 ஆயிரம். 250 சதுர அடியிலான ஒரு சிறிய தையற்கடையுடன் 1981ஆம் ஆண்டில் ‘சுப்ரீமோ’ என்ற பெயரில் ஆரம்பித்த கடையை 1991ல் ‘ஜேட்ப்ளூ’ எனும் பிராண்டாக மாற்றினர். தற்போது ஆன்டுக்கு ரூ 225 கோடி வர்த்தகத்துடன் தனியாக துணி உற்பத்தி செய்யும் ‘மில்’லே வைத்துள்ளனர்.
மோடிக்காக இவர்கள் தைத்த ஒரு உடை முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது, பெரிதும் பேசப்பட்டது. அந்த உடையில் “நரேந்திர தாமோதர தாஸ் மோடி” என்ற பெயரை “மோனோகிராம்” முறையில் பதித்துத் தைத்திருந்தனர். அதனை சாதாரணமாகப் பார்த்தால் வண்ணக் கோடு போலத்தான் தெரியும். ஆனால் உற்றுப் பார்த்தால் மட்டுமே, அது கோடு அல்ல… நரேந்திர மோடி என்ற பெயரை அவர் சட்டை முழுவதும் இப்படி வடிவமைத்து இருக்கிறார்கள் என்று தெரியும். தன் ஆடை வடிவமைப்புக்கு என்றே மோடி ஒரு குழுவை வைத்துள்ளார். அவர்கள் வடிவமைத்து, தேர்வு செய்து கொடுக்கும் ஆடைகளையே அணிகிறார்.

விதம், விதமான உடைகளால் உலகை அசத்தும் மோடி – ருசிகர ‘ரகசியங்கள்’


–இர. சுபாஸ் சந்திர போஸ்