அடாடாடா, இவுரு ஊதுறுததும் அவுங்க ஆடுறதும் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஅடாடாடா, இவுரு ஊதுறுததும் அவுங்க ஆடுறதும்

பிரதமர்  மோடி
பிரதமர் மோடி

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, கேதார்நாத் கோவிலுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், உலகப்புகழ்பெற்ற கேமராசூழ்-தியானம் மேற்கொள்வதற்கும் தனக்கு அனுமதி அளித்த, தேர்தல் ஆணையத்துக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்ததுபோல, மோடி கேமராவோடு பிறந்தாரா அதுவும் டிஜிட்டல் கேமராவோடு பிறந்தாரா என அவரது அன்னையிடம் அடுத்த முறை விசாரிக்க வேண்டும். போகட்டும், விஷயத்துக்கு வருவோம்.

modi

பிரதமர்  மோடி மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை விசாரிக்கும் குழு, மோடிக்கு சாதகமாக நடந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்படி குழு அழைப்பு விடுக்கும் கூட்டங்களுக்கு இனி கலந்துகொள்வதில்லை என குழுவில் மூவரில் ஒருவரான தேர்தல் ஆணையர் அசோக் லவசா, கடிதம் மூலம் தலைமை தேர்தல் ஆணையருக்கு அறிவிப்பு வெளியிட்டார். அவர் கடிதம் எழுதிய அடுத்த நாளான இன்றே, கேதார்நாத் ஆலயத்திற்கு செல்ல தனக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்துக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறதாமாம்.

அசோக் லவசா

நேற்றைய தியானத்தின்போதும், வழிப்பாட்டின்போதும் இந்த நாட்டுக்காக மட்டுமன்றி உலகத்துக்கே நல்லது நடக்கவேண்டும் என்று வேண்டிகொண்டதாகவும் மோடி தெரிவித்துள்ளார். தான் எப்போதுமே தனக்காக ஒருபோதும் கடவுளிடம் வேண்டிக்கொண்டது இல்லையென்றும் தெரிவித்தார் மோடி. இன்னமும் ஒரு சில முத்துக்களை அவர் உதிர்த்தார், ஆனா இத்தோட இந்த செய்தியை முடிச்சுக்குவோமே ப்ளீஸ், ஏன்னா எனக்கு ஒரு விபரீத நோய் இருக்கிறது. யாராவது தொடர்ச்சியா கேப்பே விடாம பொய் சொன்னா எனக்கு தலைவலிக்க ஆரம்பிச்சுரும், இப்போ எனக்கு விண்விண்ணுன்னு தலை வலிக்குது. அதுவும் கடைசி 5 வருஷமா ரொம்ப வலிக்கிது.

2018 TopTamilNews. All rights reserved.