‘புதிய அர்ஜுன் மாக் 1ஏ ராணுவ பீரங்கி’ வாகனம்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

 

‘புதிய அர்ஜுன் மாக் 1ஏ ராணுவ பீரங்கி’ வாகனம்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜுன் மாக் 1ஏ ராணுவ பீரங்கி வாகனத்தை ராணுவத்திற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். 3 மணி நேரமே சென்னையில் இருக்கப்போகும் பிரதமரின் வருகை, கவனத்தை ஈர்த்துள்ளது. காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு புறப்பட்டார். அங்கு அவருக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

‘புதிய அர்ஜுன் மாக் 1ஏ ராணுவ பீரங்கி’ வாகனம்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

பிறகு அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. வழி நெடுகிலும் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது, இதனிடையே, ஆவடியில் தயாரிக்கப்பட்ட புதிய அர்ஜுன் மாக் 1ஏ ராணுவ பீரங்கி வாகனத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் 59 டன் எடையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அர்ஜுன் பீரங்கிகள், 1400 குதிரை சக்தி திறனுடன் இயங்கும். எந்த தட்ப வெப்பத்திலும் எதிரிகளை துல்லியமாக தாக்கும் இந்த பீரங்கிகள், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.