• March
    30
    Monday

Main Area

Main



பொருளாதார வீழ்ச்சியை மோடி அரசு ஒத்துக் கொள்ள மறுக்கிறது – மன்மோகன் சிங் விமர்சனம்

manmohan singh
manmohan singh

டெல்லி: இந்திய பொருளாதார வீழ்ச்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு ஒத்துக் கொள்ள மறுப்பதாக மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற திட்டக்கமி‌ஷன் முன்னாள் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா எழுதிய பொருளாதார புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்திய பொருளாதார வீழ்ச்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு ஒத்துக் கொள்ள மறுப்பதாக மன்மோகன் சிங் விமர்சித்தார். பிரச்சனையை அடையாளம் காண மறுத்தால் அதற்கு நம்பகமான நடவடிக்கையை எடுக்க விரும்பவில்லை என்று அர்த்தம். இதன்மூலம் அதில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்ய முடியாத நிலை ஏற்படும் என்று மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்து மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

ttn

மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதம் அளவிற்கு கொண்டு வருவதற்கு சாத்தியம் இருக்கிறது. ஆனால் நிதிக்கொள்கையில் மறுசீரமைப்பு செய்வதுடன் தைரியமான முறையில் வரி சீரமைப்புகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என மன்மோகன் சிங் தெரிவித்தார். 1991-ஆம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் பொருளாதார நிலை கடும் சிக்கலில் இருந்தது. மேலும், அரசு பொருளாதார சீரமைப்பை ஏற்படுத்த தாராள மயமாக்கம் திட்டத்தை கொண்டு வந்தது குறித்து மன்மோகன் சிங் நினைவு கூர்ந்தார்.

2018 TopTamilNews. All rights reserved.