நடுத்தர வர்த்தகத்தினரை கவர தவறிய மோடி அரசின் மத்திய பட்ஜெட்

 

நடுத்தர வர்த்தகத்தினரை கவர தவறிய மோடி அரசின் மத்திய பட்ஜெட்

மோடி அரசின் மத்திய பட்ஜெட்டை நிபுணர்கள் பாராட்டும் வேளையில், நடுத்த வர்த்தகத்தினர் மத்திய பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய பட்ஜெட் இருந்தது. மத்திய பட்ஜெட்டை பல்வேறு நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் நாட்டின் நடுத்தர வர்த்தகத்தினரை மத்திய பட்ஜெட் கவர தவறி விட்டது என தெரியவந்துள்ளது. முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று மத்திய பட்ஜெட் தொடர்பாக அரசாங்க ஊழியர்கள் உள்பட பல்வேறு குடிமக்களிடம் கருத்து கேட்டது.

நடுத்தர வர்த்தகத்தினரை கவர தவறிய மோடி அரசின் மத்திய பட்ஜெட்
நிர்மலா சீதாராமன்

அந்த கருத்து கணிப்பில் பங்கு பெற்றவர்களில் சில குடிமக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். செலவினங்களை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்திய போதிலும், நேரடி தேவைகளை உருவாக்கும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பலர் கருதுகின்றனர். குறிப்பாக வருமான வரி சலுகைகளை நடுத்த வர்த்தகத்தினர் பட்ஜெட்டில் எதிர்பார்த்தனர். ஆனால் அது இல்லை.

நடுத்தர வர்த்தகத்தினரை கவர தவறிய மோடி அரசின் மத்திய பட்ஜெட்
பெட்ரோல் பங்கு

அடுத்ததாக சில பொருட்கள் மீதான இறக்குமதி வரி மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சில நுகர்வோர் சாதனங்கள் மற்றும் செல்போன்கள் விலை அதிகரிக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிய தொடங்கி விட்டன என தகவல் வெளியாகியுள்ளது. இது மிடில் கிளாஸ் மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில வாகன உதிரிபாகங்கள் மீதான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகனங்களின் விலையும் உயரக்கூடும் என மக்கள் நினைக்கின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அடிப்படை கலால் வரி, சிறப்பு கூடுதல் கலால் வரியை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக வேளாண் செஸ் வரியை (2.5 சதவீதம்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையாது. இதுவும் நடுத்தர வர்த்தகத்தினருக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.