பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரியை குறையுங்க.. ரிசர்வ் வங்கி சொல்லிய பிறகும் மவுனம் காக்கும் மோடி அரசு

 

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரியை குறையுங்க.. ரிசர்வ் வங்கி சொல்லிய பிறகும் மவுனம் காக்கும் மோடி அரசு

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரியை குறையுங்க என்று மத்திய அரசு அறிவுறுத்திய பிறகும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்த மவுனமாகவே உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்ததால் கடந்த பல நாட்களாக நம் நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. பல பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டு விட்டது. இந்த விலை உயர்வால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான், ஆகையால் எரிபொருள் மீதான வரியை குறையுங்க என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் ரிசர்வ் வங்கியும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை குறையுங்க என்று வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரியை குறையுங்க.. ரிசர்வ் வங்கி சொல்லிய பிறகும் மவுனம் காக்கும் மோடி அரசு
இந்திய ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி கடந்த திங்கட்கிழமையன்று கடந்த நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தின் முக்கிய குறிப்புகளை வெளியிட்டது. அந்த குறிப்பில், 2020 டிசம்பரில் நுகர்வோர் விலை குறியீடு (உணவு, எரிபொருள் தவிர்த்து) 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான அதிக அளவிலான மறைமுக வரிகள், முக்கிய சரக்கு மற்றும் சேவைகள் குறிப்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்க தொடங்கியதே காரணம்.

பெட்ரோல், டீசல் மீதான மறைமுக வரியை குறையுங்க.. ரிசர்வ் வங்கி சொல்லிய பிறகும் மவுனம் காக்கும் மோடி அரசு
பெட்ரோல் பங்கு

பொருளாதாரத்தில் விலை அதிகரிப்பால் ஏற்படும் நெருக்கடியை கட்டுக்குள் வைக்க, செயல்திறன் மிக்க விநியோக செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாக குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி எரிபொருள் மீதான வரியை குறையுங்க என்று சொல்வதற்கு முன்பே, ராஜஸ்தான், மேகலாயா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் எரிபொருள் மீதான வரியை குறைத்தன. மேலும் மற்ற மாநிலங்களும் அதனை பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசோ இதுவரை எரிபொருள் மீதான வரியை குறைப்பது தொடர்பாக எந்தவித கருத்தையும் கூறாமல் மவுனமாக இருக்கிறது.