நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவில் மோடி! – புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை நிறைவேற்றத் திட்டம்

 

நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவில் மோடி! – புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை நிறைவேற்றத் திட்டம்

நாடாளுமன்றத்தை வருகிற 10ம் தேதி கூட்ட மோடி முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சுற்றுச்சூழல் திருத்தம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவற்றை இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றம் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் பாதியிலேயே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆறு மாதத்துக்குள் மீண்டும்

நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவில் மோடி! – புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை நிறைவேற்றத் திட்டம்

நாடாளுமன்றத்தைக் கூட்டியாக வேண்டும் என்பது விதி. இந்த கெடு செப்டம்பர் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செப்டம்பர் 10ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத் தொடரின் போது மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டங்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்தம் உள்ளிட்ட

நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவில் மோடி! – புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை நிறைவேற்றத் திட்டம்

பலவற்றைக் கொண்டு வந்து வேகவேகமாக நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களவையில் பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் பா.ஜ.க அரசுக்கு பெரும்பான்மை இல்லை. கொரோனா சூழ்நிலையில் பல எம்.பி-க்கள் டெல்லிக்கு வருவது சந்தேகம். இந்த நிலையைப் பயன்படுத்தி சட்டங்களை மாநிலங்களவையிலும் நிறைவேற்றிவிடத் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

நாடாளுமன்றத்தைக் கூட்டும் முடிவில் மோடி! – புதிய கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை நிறைவேற்றத் திட்டம்கொரோனா பாதிப்பு, சீனா அத்துமீறல், பொருளாதார வீழ்ச்சி என பல்வேறு விஷயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதற்கிடையே நாடாளுமன்றம் கூட்டப்படுவதாக இருந்தால் கூட்டத்தில் பங்கேற்க முடியாத எம்.பி-க்கள் தங்கள் வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்ஸிங் முறையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.