பிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் நேரில் அஞ்சலி!

 

பிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் நேரில் அஞ்சலி!

டெல்லியில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி உடலுக்கு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பிறகும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பிரணாப் முகர்ஜி மறைவு: தலைவர்கள் நேரில் அஞ்சலி!

பிரணாப் முகர்ஜியின் மறைவு 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதே போல, குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிரணாப் முகர்ஜியின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பிரணாப் முகர்ஜியின் மகனுக்கு ஆறுதல் கூறினார். பிரதமரை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, திமுக சார்பில் மக்களை குழு தலைவர் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.