• April
    05
    Sunday

Main Area

Main



யோகா தினம்னா போதும், சின்ராசை கையிலயே புடிக்க முடியாது!

Modi on Yoga Day
Modi on Yoga Day

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டின் பொருளாதாரம் வளரந்ததோ இல்லையோ, யோகா மட்டும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. அது ஒன்றுக்காக வேண்டுமானால் பாஜக அரசை பாராட்டலாம். சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையோட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில், சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.   இந்த நிகழ்ச்சியில் 40,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

International Yoga Day

விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி "யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும்.  உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்” என்றார். நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய மைதானத்தில் 28 இடங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

2018 TopTamilNews. All rights reserved.