மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதே ஃபீலிங்!

 

மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதே ஃபீலிங்!

புதுச்சேரியில் நிலவும் அரசியல் பிரச்னை அனைவரும் அறிந்ததே. அடுத்தடுத்து 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் பாஜக காய் நகர்த்தியிருப்பதாக காங்கிரஸார் குற்றம் சாட்டி வருகிறார்கள். இத்தகைய சூழலில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதே ஃபீலிங்!

பாஜக ஆட்சி மலரும் என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். பொய் சொல்வதற்கான பதக்கங்களை நாராயணசாமிக்கு தான் தர வேண்டும். புதுச்சேரியில் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படாததன் காரணம் அவர் தான் என்று அதிரடியாக பேசினார். இதைத்தொடர்ந்து, தமிழை கற்றுக் கொண்டு பேச எனக்கு ஆசையாக இருக்கிறது. மோடி ஆசைப்படுவதைப் போல நானும் தமிழை கற்றுக் கொண்டு பேசுவேன் என்று கூறி தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த போதும் அமித்ஷா இதையே தான் கூறியிருந்தார்.

மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அதே ஃபீலிங்!

இன்று காலை மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழை கற்றுக் கொள்ள எனக்கு ஆசை. அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. தமிழ் தொன்மையான மொழி, உன்னதமான மொழி. அதை கற்க விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். தமிழகத்தில் பாஜக அரசின் இந்தி திணிப்பு கதை ஊரறியும். இன்று வரை இந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் அமித்ஷா மற்றும் மோடியின் இந்த திடீர் தமிழ் பற்று பேசுபொருளாகியிருக்கிறது.