“மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை” இன்னும் 10 நாட்களுக்கு காவிமயமாகும் தமிழகம்!!

 

“மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை” இன்னும் 10 நாட்களுக்கு காவிமயமாகும் தமிழகம்!!

தமிழகத்தை டார்கெட் ஆக கொண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கியுள்ளது பாஜக. இந்தியாவின் பல மாநிலங்களில் பாஜகவின் ஆதிக்க கொடி பறந்து வரும் நிலையில் தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைப்பது இதுவரை எட்டாத கனியாகவே உள்ளது.இதனால் இந்த முறை பாஜக கையில் எடுத்துள்ள அஸ்திரம் அதிமுக. அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளை லாவகமாக பெற்றுள்ளது.அத்துடன் நட்சத்திர வேட்பாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என பல்வேறு முக்கிய புள்ளிகளுடன் களமிறங்கியுள்ள பாஜக அதற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

“மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை” இன்னும் 10 நாட்களுக்கு காவிமயமாகும் தமிழகம்!!

இந்த சூழலில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாளை மறுநாள் முதல் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகம் வர உள்ளார்கள். நாளை மறுநாள் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா திட்டக்குடி, திருவையாறு, சென்னை துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதேபோல மத்திய அமைச்சரும் பாஜகவின் முக்கிய நிர்வாகியான ஸ்மிருதி இராணி வருகின்ற 27ஆம் தேதி கோவை தெற்கு மற்றும் சென்னை துறைமுகம் ,ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

“மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை” இன்னும் 10 நாட்களுக்கு காவிமயமாகும் தமிழகம்!!

அத்துடன் பிரதமர் மோடி வருகிற 30-ஆம் தேதி தமிழகம் வரும் நிலையில் அவர் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து தாராபுரத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகின்ற 31ம் தேதி ஊட்டி மற்றும் தளி தொகுதிகளில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.அதேபோல் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விருதுநகர், கோவை தெற்கு பகுதிகளில் வருகிற 31ம் தேதியே பரப்புரை செய்கிறார் என்று தெரிகிறது.

“மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை” இன்னும் 10 நாட்களுக்கு காவிமயமாகும் தமிழகம்!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 1-ஆம் தேதி அரவக்குறிச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில் மதுரையில் பிரதமர் மோடி வருகின்ற 2ம் தேதி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளை ஆதரித்து பாஜக தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர். இதனால் தமிழகத்தை நோக்கி தேசிய தலைவர்களின் படையெடுப்பு நிகழவுள்ளது