அவசரக் காலத்தை எதிர்க்கொள்ளத் தயாராக இருங்கள்! சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுறுத்தல்

 

அவசரக் காலத்தை எதிர்க்கொள்ளத் தயாராக இருங்கள்! சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்திலுள்ளது.

அவசரக் காலத்தை எதிர்க்கொள்ளத் தயாராக இருங்கள்! சுகாதாரத்துறைக்கு மோடி அறிவுறுத்தல்

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷவர்தன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா பங்கேற்றனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக்கு பின் அவசரக் காலத்தை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கல்ந்தாலோசித்து போதிய சிகிச்சை வசதிகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.