Home தொழில்நுட்பம் ''குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் நவீன ரோபோட் வேகுவம் கிளீனர்கள்'' - டிரிஃபோ அறிமுகம்

”குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் நவீன ரோபோட் வேகுவம் கிளீனர்கள்” – டிரிஃபோ அறிமுகம்

குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்பட்டு வீடுகளை சுத்தப்படுத்தும் ரோபாட் தொழில்நுட்பத்திலான வேகுவம் கீளினர்களை டிரிஃபோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

''குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் நவீன ரோபோட் வேகுவம் கிளீனர்கள்'' - டிரிஃபோ அறிமுகம்
Trifo launches its first robot vacuum cleaner in India - PNI

எம்மா ஸ்டாண்டர்ட் மற்றும் எம்மா பெட் என இருவேறு வகைகளில் இந்த ரோபாட் வேகுவம் கிளீனர்கள் அறிமுகமாகி உள்ளது. இதில் 2600எம்ஏஎச் பேட்டரி உள்ளது என்றும் இதனால் ஒரு முழுமையான சார்ஜ்க்கு 110 நிமிடங்களுக்கு தொடர்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோட் தொழில்நுட்பத்திலான வேகுவம் கிளீனர்களில் பல நவீன வசதிகள் உள்ளன. இதை வைஃபை உடன் இணைத்துக்கொள்ளலாம் என்றும், அலெக்ஸா உடன் இணைத்து குரல் வழி உத்தரவிட்டு இவற்றை கட்டுப்படுத்தலாம் என தெரிகிறது. அதாவது ”அலெக்ஸா., டர்ன் ஆன் எம்மா என குரல் கொடுத்து, இந்த வேகுவம் கிளீனர்களை பணிசெய்ய வைக்கலாமாம். மேலும் கொடுக்கப்பட்ட பணி முடிந்த உடனோ அல்லது சார்ஜ் முடியும் நிலையிலோ தானாகவே அதை உணர்ந்து, அதன் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு இந்த வேகுவம் கிளீனர்கள் சென்று விடுமாம்.

Trifo Ironpie m6+ Robot Vacuum Cleaner with Water Tank, 3 in 1 Mopping &  Sanitizing Vacuum Robot, 1800Pa Strong Suction, Remote Monitoring,  Self-Charging, Wi-Fi Connectivity, Hard Floor to Low-Pile Carpet, White:  Amazon.in:

செல்லப்பிராணிகளின் முடி வீடுகளின் தரையில் ஆங்காங்கே கிடந்தால், இந்த வேகுவம் கிளீனர்கள் அதை உறிந்து சுத்தப்படுத்தும் தன்மை கொண்டதாம். இதில் 600 மில்லி கொள்ள ளவு கொண்டதால் அடிக்கடி குப்பை பேக்கை மாற்ற வேண்டிய தேவை இருக்காது என்றும், நீளமான பிரஷ் மற்றும் ஸ்மார்ட் சென்சார்கள் இருப்பதால் இல்லங்களை மிக நேர்த்தியாக இது சுத்தப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த டிரிஃபோ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த வேகுவம் கிளீனர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டது என்றும், இதன் மூலம், வீடுகளின் வடிவத்தையும், சுத்தப்படுத்த வேண்டிய வழித்தடங்களையும் அவ்வப்போது தானாகவே புரிந்துகொண்டு தன்னை அப்டேட் செய்து கொள்ளும் திறன் படைத்தது என்றும் தெரிகிறது.

Trifo M6plus Robotic Vacuum Cleaner 2 In 1 at Rs 31999/piece | रोबोटिक  वैक्यूम क्लीनर - Sanmati Industrial Solution, Meerut | ID: 22403047255

இந்த வேகுவம் கிளீனர்களை டிரிஃபோ ஹோம் செல்போன் செயலி மூலமகாவும் இதை கட்டுப்படுத்தலாம் என்றும் இந்த செயலி, ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆண்டிராய்ட் பிளே ஸ்டோரிலும் கிடைக்கிறது. இந்த இரண்டு மாடல்களில் எம்மா ஸ்டாண்டர்ட் வேகுவம் கிளீனர்கள் 21,990 ரூபாய்க்கும், எம்மா பெட் வேகுவம் கிளீனர்கள், 23,990 ரூபாய்க்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

  • எஸ். முத்துக்குமார்
''குரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் நவீன ரோபோட் வேகுவம் கிளீனர்கள்'' - டிரிஃபோ அறிமுகம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறையா? – உண்மை நிலவரம் என்ன?

ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்களை அறிவிக்கும். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை தினங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தமாக சேர்த்து 15 நாட்கள் விடுமுறை தினங்களாக...

மண்ணுக்குச் சொந்தமானவர்களை வீதியில் நிறுத்தி விட்டு யாருக்காக இவர்கள் செயற்கை அழகை ஏற்படுத்த நினைக்கிறார்கள்?

சென்னை அரும்பாக்கம் ஆர்கே நகரில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் காரணமாக மாற்று குடியிருப்புக்கு செல்ல தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்கு அப்பகுதி...

மகளின் காதலனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய பெற்றோர்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு கவுசல்யா என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முகமது பெமினாஸ் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்....

ஜூன் – ஜூலையில் வழக்கத்தை விட வெளுத்து வாங்கிய மழை… 50% எக்ஸ்ட்ராவாக பொழிந்த வான்மகள்!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறுகையில், "ஜூலை மாதத்துக்கான நிகழ்தகவு வானிலை முன்னறிவிப்பின்படி இந்தியாவின் சில மாநிலங்களில் மழை இயல்பாகவோ, இயல்பைவிட குறைவாகவோ பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டது....
- Advertisment -
TopTamilNews