• April
    07
    Tuesday

Main Area

Main



டிக்டாக்கில் இளம் பெண்களை வீழ்த்திய நவீன மன்மதன்! - மனைவி சொன்ன அதிர்ச்சித் தகவல்

tiktok rajasekar
tiktok rajasekar

பண்ருட்டி பகுதியில் டிக்டாக் செயலி மூலம் பெண்களை மயக்கி, கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரைப் பற்றி அவரது மனைவியே புகார் கூறியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

tiktok


பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். 2014ம் ஆண்டு இவருக்கும் சுகன்யா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. டிக்டாக் மூலம் பெண்களை மயக்குவது, மது பழக்கத்துக்கு அடிமையான ராஜசேகருக்கும் சுகன்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜசேகரைத் தேடி புதுக்கோட்டை மாவட்ட போலீசார் சுகன்யாவின் வீட்டுக்கு வந்ததால்,  ராஜசேகர் நடத்திய பாலியல் லீலைகளை சுகன்யா போட்டுடைத்துள்ளார்.  

tiktok-guy-01

இது குறித்து கடலூர் போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் சுகன்யா. பின்னர் அது குறித்து அவர் கூறுகையில், "என் கணவர் ராஜசேகர் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். தன்னை ஒரு சினிமா ஹீரோபோல வெளியில் காட்டிக்கொள்வார். டிக்டாக்கில் ஹீரோபோல வீடியோக்களை வெளியிடுவார். இதனால் இவருக்கு நிறையப் பெண்கள் பழக்கம் ஏற்பட்டது. பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் ராஜசேகர். தற்போது அறந்தாங்கி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை செய்துவந்த கவிநயா என்ற பெண்ணுடன் டிக்டாக் மூலம் பழகி அவரது வாழ்க்கையை சீரழித்துள்ளதாக அறந்தாங்கி போலீசார் ராஜசேகரைத் தேடி வந்துள்ளனர்.

tiktok


இதற்கு முன்பு டிக்டாக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களுடன் ராஜசேகர் பழகி வருகிறார் என்று பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் போலீசில் புகார் கூறியிருந்தேன். ஆனால், குடும்ப சண்டை என்று போலீசை ஏமாற்றி என்னை சமாதானம் செய்து ராஜசேகர் அழைத்துவந்தார். தற்போது அவரைத் தேடி அறந்தாங்கி போலீசார் வந்துள்ளனர். டிக்டாக் செயலி மூலம் பல பெண்களுடன் ராஜசேகருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் சிங்கிள் என்று கூறி ஆசை வார்த்தைக் கூறி பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளார். எனவே, டிக்டாக் செயலிக்குத் தடை விதிக்க வேண்டும், எனக்கும் என் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும், ராஜசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியுள்ளேன்" என்றார்.
டிக்டாக் ராஜசேருக்கு எதிராக அறந்தாங்கி பெண் மற்றும் ராஜசேகர் மனைவி துணிவுடன் புகார் கூறியுள்ளனர். இன்னும் எத்தனை பெண்கள் வெளியே சொல்ல அசிங்கப்பட்டு உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார்களோ... குடும்பத்தைச் சீரழித்துக்கொண்டிருக்கும் டிக்டாக் போன்ற செயலிகளுக்கு அரசு தடைவிதிக்க வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக உள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.