#Modakurichi பாஜகவுடன் மோதல்.. மொடக்குறிச்சியை தட்டித் தூக்கும் திமுக!

 

#Modakurichi பாஜகவுடன் மோதல்.. மொடக்குறிச்சியை தட்டித் தூக்கும் திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பல செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கே சாதகமாக இருக்கின்றன. இப்படி இருக்கும் சூழலில், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி மொடக்குறிச்சி.

#Modakurichi பாஜகவுடன் மோதல்.. மொடக்குறிச்சியை தட்டித் தூக்கும் திமுக!

களம் காணும் வேட்பாளர்கள்:

கடந்த 30 ஆண்டுகளில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக 4 முறையும் திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவை சேர்ந்த சிவசுப்பிரமணி சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கிறார். வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவைச் சேர்ந்த சி.கே.சரஸ்வதியும் திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசனும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

#Modakurichi பாஜகவுடன் மோதல்.. மொடக்குறிச்சியை தட்டித் தூக்கும் திமுக!

ஆளப்போவது யார்?

அதிமுக வசம் இருக்கும் மொடக்குறிச்சி தொகுதியில், இந்த முறை பாஜக வேட்பாளர் களம் காணுகிறார். அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயாராக இல்லை. பெரும்பாலான மக்கள் பாஜகவுக்கு எதிரான தங்களது அதிருப்தியையே வெளிப்படுத்தினர். இதனால், நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு வாக்குகள் சிதறுகின்றன.

மொடக்குறிச்சி தொகுதியில் முக்கிய பிரச்னைகளாக மக்கள் சொல்லியிருப்பது குடிநீர் பிரச்னை, திறந்தவெளி சாக்கடைகள் மற்றும் சாலை பிரச்னை. அதுமட்டுமில்லாமல் தற்போதைய எம்.எல்.ஏவான சிவசுப்பிரமணி தொகுதி பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

சர்வேயின் முடிவில், மொடக்குறிச்சி தொகுதி திமுகவுக்கே ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. அதற்கு அடுத்த படியாக பாஜகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் ஆதரவு தெரிவிகின்றனர். நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…!