சென்னையில் நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனை சேவை தொடக்கம்!

 

சென்னையில் நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனை சேவை தொடக்கம்!

தமிழிகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,982 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 1,479 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 28,904 ஆகஅதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிகஅளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனை சேவை தொடக்கம்!

 

அதன் ஒரு பகுதியாக சென்னையில் 173 நடமாடும் வாகனங்கள் இயக்கப்படும் என்றும் சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு நடமாடும் மருத்துவமனை மூலம் பரிசோதனை செய்யப்படும் என்றும் கொரோனா அறிகுறி இருப்பவர்களை நடமாடும் வாகனங்கள் மூலமாக மருத்துவமனை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

அதன் படி இன்று சென்னையில் முதற்கட்டமாக 81 நடமாடும் மருத்துவமனைகள் சேவையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அந்த வாகனம் மூலம் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யப்படும் என்றும் அதில் ஒருமருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.