வாக்கு எண்ணும் மையங்களுக்கு இதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது!

 

வாக்கு எண்ணும் மையங்களுக்கு இதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிகையை சுமுகமாக கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று கருத்து தெரிவித்தனர்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு இதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூட அனுமதியில்லை, கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம், கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடயே, வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமென தமிழக அரசு அறிவித்தது. அன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் முகவர்கள், வேட்பாளர்களுக்கு கட்டுபாடுகள் இல்லையென அரசு தெரிவித்தது.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு இதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது!

இந்த நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன், கேமரா, பேனாக்கள், பாட்டில்கள், டிபன் பாக்ஸ், குடைகள், வேதிப்பொருட்கள், திண்பண்டம், தீக்குச்சிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் நுழைய பாஸ் வைத்திருப்பவர்கள் தவிர வேறு ஆட்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.