“என் வாழ்க்கையே உங்க கையில தான்” – மோசடி குரலால் பறிபோகும் பணம்… ஆன்லைன் கொள்ளையர்களின் புது டெக்னிக்!

“என் வாழ்க்கையே உங்க கையில தான்” – மோசடி குரலால் பறிபோகும் பணம்… ஆன்லைன் கொள்ளையர்களின் புது டெக்னிக்!

தொழில்நுட்பங்கள் வளர வளர நம் உலகம் சுருங்கி கொண்டிருக்கிறது. இதைக் கொண்டு உலகின் எந்த மூலையிலிருந்தும் மக்களை மிக எளிதாக மோசடி செய்துவிட முடிவதுதான் வேதனையைக் கூட்டுகிறது. முன்பை விட இப்போது குறுக்குவழிகளில் ஆன்லைன் கொள்ளையர்கள் அறியாத மக்களிடம் மிக எளிதாக பணத்தைக் கொள்ளையடித்து விடுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து மக்களும் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர்.

“என் வாழ்க்கையே உங்க கையில தான்” – மோசடி குரலால் பறிபோகும் பணம்… ஆன்லைன் கொள்ளையர்களின் புது டெக்னிக்!

இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி முழுதும் அறியாத அம்மக்களிடம் நைச்சியமாக பேசி தகவல்களை அவர்களுக்கே தெரியாமல் வாங்கி மிரட்டுகின்றனர். தகவல்களின் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து கொள்ளையடிக்கிறார்கள். போன் செய்து வங்கி கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு எண் என அனைத்தையும் உருவி அதன் மூலம் பணம் பறித்துவந்தனர். தற்போது மக்கள் உஷாராகிவிட்டதால் புது டெக்னிக் ஒன்றை கொள்ளைக் கும்பல் கண்டுபிடித்துள்ளது. அதாவது உங்கள் செல்போன் எண்ணை போலவே இருக்கும் எண்ணிலிருந்து கால் செய்து கைவரிசை காட்டுகிறார்கள்.

“என் வாழ்க்கையே உங்க கையில தான்” – மோசடி குரலால் பறிபோகும் பணம்… ஆன்லைன் கொள்ளையர்களின் புது டெக்னிக்!

9 எண்கள் உங்கள் எண்களைப் போலவும், 1 எண் மட்டும் வேறு மாதிரியாகவும் இருக்கும். உதாரணத்திற்கு 99999 99999 என்ற எண் உங்களுடையது என்றால் உங்களுக்கு கால் செய்யும் அந்த மோசடி கொள்ளையனின் எண் 99999 99998 என்று இருக்கும். இந்த எண்ணிலிருந்து அழைத்து அவர்கள் தாங்கள் மகாராஷ்டிராவிலிருந்து பேசுவதாகவும் யூபிஎஸ்சி அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து ஒரு எண் மாறுதலாக தங்களது எண்ணை தவறாக கொடுத்துவிட்டதாகவும் கூறுவார்கள். மேலும் உங்கள் எண்ணுக்கு ஓடிபியை தெரிவித்தால்தான் தேர்வு எழுத முடியும். அரசு வேலை பெற முடியும். எனது வாழ்க்கை உங்கள் கையில்தான் உள்ளது.

“என் வாழ்க்கையே உங்க கையில தான்” – மோசடி குரலால் பறிபோகும் பணம்… ஆன்லைன் கொள்ளையர்களின் புது டெக்னிக்!

எனவே, சற்று நேரத்தில் வரும் ஓடிபி எண்ணை மட்டும் தெரிவித்தால் போதும் என கெஞ்சி கேட்பார்கள். நீங்களும் பாவம் பார்த்து ஓடிபியை கொடுத்துவிட்டால் அவர்களின் வேலை கச்சிதமாக முடிந்துவிடும். அதற்குப் பிறகு உங்களது வங்கி கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் ஆன்லைன் மூலமாகவே எடுத்து விடுவார்கள். இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இப்படி யாராவது போன் செய்தால் ராங் நம்பர் என்று போனை வைத்து விடுவதே சாலச் சிறந்தது என்றும், யாருக்கும் ஓடிபி எண்ணை பகிர கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.