பெட்ரோல், டீசல் விலை உயர்வு : போராட்டத்தில் குதித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : போராட்டத்தில் குதித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 70 ரூபாய் வரையிலேயே விற்கப்பட்டு வந்த பெட்ரோல் தற்போது 100 ரூபாயை எட்டியிருப்பது பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுமட்டுமில்லாமல் கேஸ் சிலிண்டர் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : போராட்டத்தில் குதித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பதால் பெட்ரோல் விலை உயருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்திருந்தார். இதனை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது. காங்கிரஸ் ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை தற்போதைய விலையை விட அதிகமாக இருந்தது. அப்போதே, பெட்ரோல் 70 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால், இப்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியிருப்பதன் காரணமென்னவென்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வையும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, பொள்ளாச்சி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.