Home தமிழகம் "அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

“அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா” – டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

கமலுக்கு பத்தரையில் பிரச்சினை

"அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரான கமல்ஹாசனுக்கே இன்னும் இடஒதுக்கீடு குறித்த புரிதல் இல்லை என்பதே அவரின் பேச்சுகள் உணர்த்துகின்றன. ஒரு பேட்டியில் இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார். மற்றொரு பேட்டியில் சாதியை விண்ணப்பங்களிலிருந்து தூக்கிவிட்டால் சாதி ஒழிந்து விடும் என்று கனவுலகத்திலிருந்து பதிலளிக்கிறார். உயர் சாதி ஏழைகளுக்கான 10.5% (பத்தரை) இடஒதுக்கீடு குறித்து கேள்வி கேட்டால் மைக்கை பக்கத்தில் இருப்பவரிடம் கொடுக்கிறார். அப்படியாக அவர் சொன்ன ஒரு பதிலும் அதற்கு அவரது கட்சி வேட்பாளர் பத்மபிரியா அளித்த விளக்கமும் பெரிதும் பேசுபொருளானது.

"அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

சீப்பை ஒழித்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமே

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மனுக்களில் சாதிக்கான பிரிவு இல்லை என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். சாதி வேறுபாட்டை சமூகத்தில் ஒழிப்பதற்கு இதுவே சரியான வழி என மறைமுகமாக முன்வைக்கிறார். சமூகம் மட்டுமல்லாமல் அரசியலிலும் தீண்டாமை இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் தனி தொகுதி (Reserve) என்ற ஒரு அங்கமே இருக்கிறது. அங்கு தலித் மக்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர்களும் அரசியல் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். இப்போது இதை எதற்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டால் காரணம் இல்லாமல் இல்லை.

"அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

வேட்பாளர் மனுவில் சாதி குறிப்பிடவில்லை என்றால் எப்படி தனி தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்த முடியும் என்ற கேள்வி எழுகிறது. சாதியைக் கேட்காமல் எப்படி கமல் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார். இதற்கான பதிலிலிருந்தே இட ஒதுக்கீட்டின் தேவையை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். பள்ளி படிவங்களில் சாதி குறிப்பிடவில்லை என்றால் எப்படி இடஒதுக்கீட்டைப் பெற முடியும். இடஒதுக்கீட்டுக்காகப் போராடிய காலம் போய் இன்று இடஒதுக்கீடு என்றால் ஒவ்வாமை மனநிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த ஒவ்வாமை மநீம வேட்பாளர் பத்மபிரியாவையும் தாக்கியிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓவர்நைட்டில் சாதியை ஒழித்த ’முதல்வன்’ ரகம்

ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் வேட்பாளர் மனுக்களில் சாதிக்கான பிரிவு இல்லை என கமல் சொல்லியிருப்பது குறித்த ஒரு கேள்வியை பத்மபிரியாவிடம் கேட்க அவர் கூறிய பதில் அசரடிக்கும் விதமாக இருந்தது. முதல்வன் படத்தில் அர்ஜூன் சொல்வதைப் போல சாதி சான்றிதழை கிழித்து போட்டால் ஓவர்நைட்டில் சாதி ஒழிந்துவிடும் ரகமாக இருந்தது அவர் கூறிய பதில். “சில சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு சமமான வாய்ப்பு எல்லாவற்றிலும் வழங்கப்படாததால் இட ஒதுக்கீடு முறை வந்தது. இப்போது நம் சமூகத்தில் எல்லோரும் சமமாக இருப்பதைப் பார்க்கிறோம். நன்றாகப் படித்திருக்கிறார்கள். நல்ல வாழ்க்கைக வாழ்கிறார்கள்.

"அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

இனியும் சாதிமுறை வேண்டுமென நினைக்கிறீர்களா? திறமை இருப்பவர்கள் படித்து மேலே வந்துவிடலாம். பல உயர்சாதி மக்களால் திறமை இருந்தும் வேலைக்கு வர முடியவில்லை. பலர் திறமையே இல்லாமல் இடஒதுக்கீட்டால் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். மக்களிடம் சென்று சாதிவாரி இட ஒதுக்கீடு வேண்டுமா எனக் கேட்டால் பலரும் வேண்டாம் என்றுதான் சொல்வார்கள். இடஒதுக்கீடு ரொம்ப காலத்துக்கு முன் கொண்டுவரப்பட்டது. அது ஏன் இன்னும் மாற்றப்படவில்லை?” இது தான் பத்மபிரியா உதிர்த்த முத்துக்கள்.

அந்த கேள்வி மட்டும் வேண்டாம்… ஆப் த கேமரா

இது பெரும் சர்ச்சையான பின் போகும் இடமெல்லாம் பேட்டியில் இதே கேள்விகளைக் கேட்கின்றனர் செய்தி நிறுவன நிருபர்கள். சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குப் பேட்டியளிக்கும்போது, இடஒதுக்கீடு குறித்த இதே கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு நீண்ட நேரமாக இடஒதுக்கீடு வேண்டாம் என்பதை சுற்றி சுற்றி கூறிக் கொண்டிருந்தார்.

தான் முந்தையை பேட்டியில் சொன்னதை நியாயப்படுத்தியும் பேசியிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையிழந்த பத்மபிரியா, “இட ஒதுக்கீடு குறித்து கேள்வி கேட்காதீர்கள். முன்னாடியே சொல்லிவிட்டேன் ஆனால் நீங்கள் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள். கேமராவ கட் பண்ணுங்க” என பரிதவித்து விட்டார். நீங்கள் ஒரு மக்கள் பிரதிநிதி பதில் சொல்லுங்கள் என நிருபர் கேட்டும், பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

இடஒதுக்கீடு ஏன் வேண்டும்?

இது ஒருபுறமிருக்கட்டும் இடஒதுக்கீடுக்கு மீண்டும் வருவோம். முன்பை விட இடஒதுக்கீடு ஒரு கேவலமான சொல்லாக மக்களிடையே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. அப்போது இடஒதுக்கீடு மட்டும் சாதியை ஒழித்துவிடுமா என்ற அறிவுப்பூர்மாக ஒரு கேள்வியை எதிர்ப்பாளர்கள் முன்வைக்கலாம். அதற்கு சாதி என்பது சமூகத்தின் கூட்டு மனநோய் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான மருந்து இடஒதுக்கீடு மட்டுமே. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்போது இருக்கும் உயர் சாதிகளைத் தவிர்த்து எந்த சாதியினருக்கும் சாதியைக் காரணம் காட்டி கல்வி வழங்கப்படவில்லை. இந்த உண்மையை எவராலும் மறுக்க முடியாது. இதை மறுப்பவர்கள் உங்கள் குடும்பத்தில் யார் முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

"அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!

இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூகத்தை பீடித்திருக்கும் மற்றொரு மனநோய்

இடஒதுக்கீட்டாலும் சாதியை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் இடஒதுக்கீட்டால் சாதியை மழுங்கடிக்க முடியும். எப்படி என்றால் இடஒதுக்கீட்டால் கல்வி பெறுகிறோம்; அதனால் நம்முடைய பொருளாதாரம் உயர்கிறது; சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கிறது. இப்படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வளரும் பட்சத்தில் உங்கள் சாதி முன்னிறுத்தபடாது இல்லையா? அப்படியே முன்னிறுத்தப்பட்டாலும் உங்களை யாரும் ஒடுக்க முடியாது. சாதி ரீதியான தாக்குதல்களை எதிர்கொள்வது குறையும். சாதி ரீதியில் கேவலப்படுத்தி உளவியத் தாக்குதல்களும் பெருமளவு குறையும். அதற்கு சர்வநிச்சயமாக இடஒதுக்கீடு அவசியம்… அவசியம்… இடஒதுக்கீடு வேண்டுமென்றால் சாதி சான்றிதழும் அவசியம்… அவசியம்…

"அந்த கேள்வி மட்டும் வேண்டாம்; ஆப் த கேமரா" - டென்ஷனான மநீம வேட்பாளர் பத்மபிரியா!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்தியாவுல ஃபர்ஸ்ட்.. வேர்ல்டுல 11ஆவது – உலகளவில் டிரெண்டாகி மாஸ் காட்டும் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி அனைத்துவிதமான ஊடக வழியாகவும் நாட்டு மக்களிடம் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். சொல்லப்போனால் அதுதான் அவரின் பலமும் கூட. மன்கி பாத் மூலம் வானொலியில் உரையாடுவார். அந்த நிகழ்ச்சி...

வயிற்று வலியால் துடித்த மாணவி.. டாக்டர் சொன்னதை கேட்டு துடித்த பெற்றோர்

பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான பக்கத்துவீட்டு இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை அடுத்த திருமுல்லைவாயலில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

‘ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய’… அதிமுக முன்னாள் எம்.பி திமுகவில் இணைகிறார்!

அதிமுக முன்னாள் எம்.பி பரசுராமன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து முதல்வரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, பிற கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில்...

“அரசியல் காழ்ப்புணர்ச்சியால், பெண்ணை தூண்டிவிட்டு புகார் அளித்தனர்”… கோவை தங்கம் பேட்டி!

கோவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பெண்ணை தூண்டிவிட்டு தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக, முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் தெரிவித்துள்ளார்.
- Advertisment -
TopTamilNews