‘பாஜகவை வெல்ல எங்களது வியூகம் இது தான்’ – கமல் சொன்ன பதில்!

 

‘பாஜகவை வெல்ல எங்களது வியூகம் இது தான்’ – கமல் சொன்ன பதில்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் ஐ.ஜே.கே உடன் கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு தலா 40 இடங்களை ஒதுக்கிய மக்கள் நீதி மய்யம், எஞ்சிய தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்குகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

‘பாஜகவை வெல்ல எங்களது வியூகம் இது தான்’ – கமல் சொன்ன பதில்!

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவை எதிர்கொள்ள எங்கள் நேர்மையை யூகமாக வைத்துள்ளோம். எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது. அரசியல் எங்கள் கடமை, அதையும் நாங்கள் செய்வோம். என்று கூறினார்.

‘பாஜகவை வெல்ல எங்களது வியூகம் இது தான்’ – கமல் சொன்ன பதில்!

கோவை தெற்கில் எதிர்காக போட்டியிடுகிறீர்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரை மீட்டெடுக்க போட்டியிடுகிறேன் என பதிலளித்தார். மேலும், கோவை மண்டலத்திற்கு தேவையான விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் இல்லை என்றும் இந்தியாவிற்கு முன்மாதிரியாக கோவை தெற்கு தொகுதியை மாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.