‘கோவை தெற்கில்’ டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் பரபரப்பு புகார்!

‘கோவை தெற்கில்’ டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் பரபரப்பு புகார்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு, அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுக்கும் பணியை சைலண்டாக மேற்கொண்டு வந்தன. இதை கண் கொத்திப் பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள், கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுத்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சியினர் பலர் பணப்பட்டுவாடா விவகாரத்தில் சிக்கினர்.

‘கோவை தெற்கில்’ டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் பரபரப்பு புகார்!

இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கப்பட்டு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதற்கான நகல் தன்னிடம் இருப்பதாகவும் பணப்பட்டுவாடா பற்றி புகாரளிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘கோவை தெற்கில்’ டோக்கன் கொடுத்து பணப்பட்டுவாடா… கமல்ஹாசன் பரபரப்பு புகார்!

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவில் இருந்து வானதி சீனிவாசனும், காங்கிரஸில் இருந்து மயூரா ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். வானதி சீனிவாசனுக்கு கமல்ஹாசனுக்கும் இடையே இங்கு கடும் போட்டி நிலவுகிறது. இப்படி இருக்கும் சூழலில், பணப்பட்டுவாடா செய்து வாக்காளர்களை திசை திருப்புவதாக கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.