“நான் அன்றே சொன்னேன்… முதல்வர் இன்றுதான் சொல்கிறார்” – ஸ்டாலின் அறிவிப்பால் குஷியான கமல்!

 

“நான் அன்றே சொன்னேன்… முதல்வர் இன்றுதான் சொல்கிறார்” – ஸ்டாலின் அறிவிப்பால் குஷியான கமல்!

தொழில்துறை சார்பில் நேற்று ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு’ என்ற தலைப்பில் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் 33 தனியார் நிறுவனங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். நிகழ்வில் பேசிய அவர், “தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவதே எங்களது அரசின் லட்சியம்.

“நான் அன்றே சொன்னேன்… முதல்வர் இன்றுதான் சொல்கிறார்” – ஸ்டாலின் அறிவிப்பால் குஷியான கமல்!

2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் ஜிடிபி பொருளாதாரத்தை உருவாக்குவதே, எங்கள் அரசின் குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க, முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். தொழில் புரிவதை மிகவும் எளிதாக்கிடவும், அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிடவும், நான் உறுதி பூண்டுள்ளேன்” என்றார்.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தை ஒன் டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும், மாற்ற முடியும் எனும் இலக்கினை முதன்முதலில் முன்வைத்த கட்சி மக்கள் நீதி மய்யம். இப்போது தமிழக முதல்வரும் 2030-ல் அந்த இலக்கை எட்டும் பாதையைத் தேர்ந்துள்ளார் என்பதில் மகிழ்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.