மருத்துவமனையிலிருந்து திடீர் அழைப்பு… உயிரை காக்க பிரச்சாரத்தை நிறுத்திய வேட்பாளர் – உருகிய மூதாட்டியின் உறவினர்கள்!

மருத்துவமனையிலிருந்து திடீர் அழைப்பு… உயிரை காக்க பிரச்சாரத்தை நிறுத்திய வேட்பாளர் – உருகிய மூதாட்டியின் உறவினர்கள்!

ஊரை அடித்து உலையில் போடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் மக்கள் சேவையாற்றும் வேட்பாளர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் மூர்த்தி. புதுக்கோட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். பிரச்சாரத்துக்கு நேற்றே கடைசி நாள் என்பதால் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் மூர்த்தி ஈடுபட்டு வந்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து திடீர் அழைப்பு… உயிரை காக்க பிரச்சாரத்தை நிறுத்திய வேட்பாளர் – உருகிய மூதாட்டியின் உறவினர்கள்!

பிரச்சாரத்தின் நடுவே அவரது செல்போனுக்கு ஒரு எமர்ஜென்சி அழைப்பு வந்துள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறது அந்த அழைப்பு. உடனே எடுத்துப் பேசிய அவரிடம், மூதாட்டி ஒருவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள AB+ ரத்தம் தேவைப்படுகிறது; உங்க ரத்த குரூப் அதான என்று எதிர்முனையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆம் எனக் கூறி பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்தி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

மருத்துவமனையிலிருந்து திடீர் அழைப்பு… உயிரை காக்க பிரச்சாரத்தை நிறுத்திய வேட்பாளர் – உருகிய மூதாட்டியின் உறவினர்கள்!

கடைசி நேர பிரச்சாரம் என்பதையும் பொருட்படுத்தாமல், மிகச் சரியான நேரத்தில் ரத்தம் கொடுத்ததால் அந்த மூதாட்டியின் உயிர் காப்பாற்றப்பட்டது. மூர்த்தியின் இந்தச் செயலுக்கு மூதாட்டியின் உறவினர்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய மூர்த்தி, “நாம் அளிக்கும் சிறுதுளி ரத்தம் முகம் தெரியாத ஒருவரின் உயிரையே காப்பாற்றும். ஆகவே கொடையிலேயே சிறந்தது ரத்த தானம் தான். என்னுடைய வாழ்நாளில் தற்போது 67வது முறையாக ரத்ததானம் செய்கிறேன்.

மருத்துவமனையிலிருந்து திடீர் அழைப்பு… உயிரை காக்க பிரச்சாரத்தை நிறுத்திய வேட்பாளர் – உருகிய மூதாட்டியின் உறவினர்கள்!

அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், சிவகாமி ரத்த தானக் கழகம் என்ற அமைப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான யூனிட் ரத்தத்தைக் கொடையாகப் பிரசவத்திற்கும், மருத்துவமனைக்கும் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய பெயர், செல்போன் நம்பர் உள்ளிட்டவை மருத்துவமனையில் இருக்கிறது.

அவசர அறுவை சிகிச்சைக்கு ரத்தம் தேவைப்பட்டால் எங்களை அழைப்பார்கள். அதனால் தான் பிரசாரத்தை ரத்துசெய்து ரத்தம் கொடுத்தேன். நம்மால் ஒருவருக்கு மறுவாழ்வு கிடைக்கப்போகுது என்பதை நினைக்கும்போதே மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் புன்முறுவலோடு.