சுடுகாட்டில் இருந்து பரப்புரை.. மாஸ் காட்டிய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்!

 

சுடுகாட்டில் இருந்து பரப்புரை.. மாஸ் காட்டிய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்!

காரைக்குடி தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் இராசகுமார் சுடுகாட்டில் இருந்து பரப்புரையை தொடங்கியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகளை ஒதுக்கிய கமல்ஹாசன், எஞ்சியுள்ள தொகுதிகளில் மநீம வேட்பாளர்களை களமிறக்குகிறார். வேட்பாளர்களின் பட்டியலை அண்மையில் கமல்ஹாசன் வெளியிட்ட நிலையில், வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

சுடுகாட்டில் இருந்து பரப்புரை.. மாஸ் காட்டிய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்!

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதி வேட்பாளரான இராசகுமார் இன்று தனது பரப்புரையை தொடங்கினார். பிரச்சாரத்துக்கு செல்வதற்கு முன்னர் சந்தைப்பேட்டை பகுதியில் இருக்கும் சுடுகாட்டுக்கு சென்ற அவர், சமாதிக்கு மாலை அணிவித்து வணங்கிய பிறகு அங்கிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சுடுகாட்டில் இருந்து பரப்புரை.. மாஸ் காட்டிய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்!

மநீம வேட்பாளரான இராசகுமார், காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு பல தொண்டுகள் செய்திருக்கிறார். சாலையோரங்களில் ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு உணவு கொடுப்பது, சிகிச்சைக்கு உதவுவது போன்ற பல செயல்கள் செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், ஆதரவற்ற நிலையில் கிடக்கும் சடலங்களை மீட்டு அடக்கம் செய்வது போன்ற அரிதான செயல்களையும் செய்திருக்கிறார். இவர் சுயேட்சையாக போட்டியிடவிருந்த நிலையில், கமல்ஹாசன் அவருக்கு மக்கள் நீதி மய்யத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறார். இராசகுமாரை மக்கள் சட்டமன்றத்துக்கு அனுப்புகிறார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரிய வரும்..!