14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

 

14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த தொண்டர் மணிகண்டன். கைவினைக் கலைகளில் சிறப்புவாய்ந்தவரான இவர் 14 மிமீ உயரத்தில் கட்சியின் சின்னமான டார்ச் லைட்டை தங்கத்தில் வடிவமைத்திருக்கிறார். உலகிலேயே மிக மிகச்சிறிய அளவில் தேர்தல் சின்னத்தை வடிவமைத்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் தனது படைப்பினை கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் வழங்கினார். அதன்பின் கமல்ஹாசன் மணிகண்டனை வாழ்த்தினார்.

14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

ஒரு கண்ணாடி குடுவைக்குள் அடக்கமாக சிறிய தங்க டார்ச் லைட் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அச்சின்னத்தைப் பெற பெரிய போராட்டமே நடந்தது. கட்சியை ஆரம்பித்த கமல் எடுத்த எடுப்பிலேயே 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கட்சியைப் போட்டியிட வைத்தார். அப்போது அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யத்திற்குக் கொடுக்கப்பட்டது. அந்தச் சின்னத்தைப் பிரபலப்படுத்தி அக்கட்சி 3 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. டார்ச் லைட் சின்னம் மக்களிடையே பிரபலமானதையடுத்து எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதே சின்னம் ஒதுக்கப்படும் என கமல் எதிர்பார்த்தார்.

ஆனால் தேர்தல் ஆணையமோ அச்சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. புதுச்சேரியில் மட்டும் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழகத்திலும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்குமாறு மய்யம் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளையில் எம்ஜிஆர் மக்கள் கட்சியும் தங்களுக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என கோரிக்கை விடுத்தது. இதையடுத்து டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டது.

14 மிமீ உயரத்தில் தங்க ‘டார்ச் லைட்’ சின்னம்… படைத்த தொண்டரை வாழ்த்திய கமல்!

அப்போது இதனை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்ட கமல், “மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாளில் இது நிகழ்ந்திருக்கிறது. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும், எம்மோடு துணை நின்றவர்களுக்கும் நன்றி. ஒளி பரவட்டும்!” என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.