• April
    04
    Saturday

Main Area

Main



'போலி தாடியுடன்'...இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கும் வகையில் நடந்த போலீசார் தீவிரவாத பாதுகாப்பு ஒத்திகை : ம.ம.க தலைவர் கண்டனம்!

எம்.எச்.ஜவாஹிருல்லா
எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழகத்தில் தொடர்ந்து தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பல பேர் 
கைது செய்யப்பட்டு வருகின்றனர்.  தமிழகம் தீவிரவாதிகளின் இருப்பிடமாக மாறி வருகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இதில், தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இஸ்லாமிய மதத்தினை சேர்ந்தவர்கள் தான் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

ttn

இந்நிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிரவாத தாக்குதலின் போது நம்மை எப்படிக் காத்துக் கொள்வது குறித்த பாதுகாப்பு ஒத்திகையைக் காவல் துறையினரால் நடத்தப்பட்டது. அப்போது, போலீசார் தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள் தான் என்று சித்தரிக்கும் வகையில் அவர்களது மத அடையாளமான தாடியை ஒட்டிக் கொண்டு விழிப்புணர்வு நடத்தினர். இது இஸ்லாமியர்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது. 

ttn

இதற்குக் கண்டனம் தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மாக் டிரில் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் நடத்திக்காட்டப்பட்டது.

ttn

இந்த ஒத்திகையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் மத அடையாளமாக விளக்கும் தாடியைச் செயற்கையான முறையில் ஒட்டிக்கொண்டு பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.பாதுகாப்பு ஒத்திகை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்த நடத்தப்பட்ட நிகழ்வில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் எனச் சாமானிய மனிதர்களின் மனதில் பதிய வைத்து முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை வெறுக்கவும், அவர்களை பொது இடங்களில் சந்தேகப் பார்வையுடன் பார்க்கவும் இந்த ஒத்திகை உதவும்.

ttn

எனவே, இந்த முஸ்லிம் வெறுப்பு ஒத்திகையை நடத்திய சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.