ஸ்டாலினிடம் சொல்லிட்டுதான் ராஜினாமா- வெங்கடேசன் எம்.எல்.ஏ

 

ஸ்டாலினிடம் சொல்லிட்டுதான் ராஜினாமா- வெங்கடேசன் எம்.எல்.ஏ

புதுச்சேரி மாநிலத்தின் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் புதுவை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஆட்சி தொடர வேண்டுமானால் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருக்கும் நிலையில் காங்கிரஸ் வசம் இருந்த 14 எம்எல்ஏக்களில், இன்று ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக எம்எல்ஏவும் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி 12 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது.

ஸ்டாலினிடம் சொல்லிட்டுதான் ராஜினாமா- வெங்கடேசன் எம்.எல்.ஏ

இந்நிலையில் ராஜினாமா செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேசன் எம்.எல்.ஏ, “புதுச்சேரியில் தற்போது உள்ள அரசால் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தான் ராஜினாமா செய்தேன். தொகுதிக்கு எதுவும் செய்ய முடியாத சூழலில் எப்படி மக்களிடம் சென்று வாக்கு கேட்க முடியும். கட்சித் தலைமையிடமும் ஸ்டாலினிடமும் ராஜினாமா பற்றி சொல்லிவிட்டேன். தற்போதும் நான் திமுகவில்தான் உள்ளேன். எம்.எல்.ஏ பதவியை மட்டும்தான் ராஜினாமா செய்துள்ளேன். யாரும் ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தாம் கொடுக்க வில்லை.” எனக் கூறினார்.