திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு!

 

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு!

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 வரை அதிமுக அரசு ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து கொண்டார். செந்தில் பாலாஜி இப்போது திமுக எம்.எல்.ஏ வாக இருந்து வருகிறார். இவர் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ. 4.32 கோடி மோசடி செய்ததாக அம்பத்தூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அவர் மீதான புகார் உறுதியானது. இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றுக் கொண்டார். செந்தில் பாலாஜி மீதான இந்த மோசடி வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க மறுப்பு!

இதனைத்தொடர்ந்து, இந்த மோசடி வழக்கு எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியை மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.