பேரம் பேசும் ஐ பேக்… இதுக்கெதுக்கு இவ்வளவு கோடி..! புலம்பித்தீர்க்கும் தி.மு.க எம்.எல்.ஏ-கள்.!?

 

பேரம் பேசும் ஐ பேக்… இதுக்கெதுக்கு இவ்வளவு கோடி..! புலம்பித்தீர்க்கும் தி.மு.க எம்.எல்.ஏ-கள்.!?

’அடுத்த ஆட்சி திமுகதான்’ என கிளப்பிவிடப்படும் கதைகளை நம்பி அந்த கட்சி நிர்வாகிகள் பலரும் சீட்டு கேட்டு பல்வேறு அதிகார மையங்களின் கதவுகளைத் தட்டி வருகின்றனர். எல்லா இடங்களிலும் பணமே பிரதானமாகக் கேட்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பேரம் பேசும் ஐ பேக்… இதுக்கெதுக்கு இவ்வளவு கோடி..! புலம்பித்தீர்க்கும் தி.மு.க எம்.எல்.ஏ-கள்.!?

இந்த கரன்சி விளையாட்டில் இந்தமுறை முன்னணியில் இருப்பது ஐபேக் டீம்தான். தமிழகம் முழுவதும் களமிறக்கப்பட்டிருக்கும் ஐபேக் ஆட்கள் ஆங்காங்கே உள்ள திமுக புள்ளிகளின் பின்னணி பற்றி விசாரிக்கிறார்கள். இதில் சீட்டுக்கு ஆசைப்படும் பசையுள்ள பார்ட்டிகளை தொடர்புகொண்டு தூண்டில் போடுகிறார்கள். ‘’ எங்க சர்வேயில் உங்க பெயர் ரொம்ப கீழே இருக்குது. அதை மேலே கொண்டுவர வேண்டுமென்றால்…’’ என்கிற தூண்டிலுக்கு பலர் இரையாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் தொழிலதிபரிடம் பல லட்சங்களை இப்படி கறந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இப்படி பல இடங்களிலும் ஐபேக் ஆட்கள் ஆட்டய போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ’’காசை வாங்கிட்டு பட்டியல் தயார் பண்ணும் இவர்களை பல கோடிகள் கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்க வேண்டுமா?’’ என்கிற அதிருப்தி குரல் திமுகவில் மெல்ல மெல்ல ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பேரம் பேசும் ஐ பேக்… இதுக்கெதுக்கு இவ்வளவு கோடி..! புலம்பித்தீர்க்கும் தி.மு.க எம்.எல்.ஏ-கள்.!?


ஐபேக்கிற்கு அடுத்தபடியாக இந்த ஆட்டத்தில் இருப்பது உதயநிதி அணிதான். இந்த அணியின் சீட் பேர விவகாரங்களை உதயாவுக்கு மிக நெருக்கமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான் டீல் பண்ணுகிறாராம்.’’ 30 சதவீதத்திற்கும் குறையாமல் இளைஞர் அணிக்குத்தான்’’ என சொல்லியே எம்.எல்.ஏ கனவில் இருப்பவர்களை கவிழ்த்து விடுகிறார்களாம்.

பேரம் பேசும் ஐ பேக்… இதுக்கெதுக்கு இவ்வளவு கோடி..! புலம்பித்தீர்க்கும் தி.மு.க எம்.எல்.ஏ-கள்.!?


உதயநிதி தவிர ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினட்டும் பலரிடமும் உறுதியளித்திருப்பதாக சொல்லப்படுகிறது. தஞ்சையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் கிச்சன் கேபினட்டை சந்தித்தபோது, ‘’ நீங்க மற்றதை ரெடி பண்ணுங்க. ஆக வேண்டியதை நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என வாக்குறுதி தந்தாராம். இதுபோக மகளிரணி செயலாளர் கனிமொழியும் ஒரு பெரிய பட்டியலுடன் வலம் வருகிறார். நெல்லை மாவட்டம் நான்குனேரி தொகுதியில் ஆரோக்கிய எட்வின் என்பவரை நிறுத்த அவர் மல்லுகட்டுகிறார். வில்லங்க பேர்வழியான எட்வின் இத்தனை காலமும் சென்னையில் இருந்துவிட்டு தேர்தலுக்காக இப்போதுதான் தொகுதிக்குள் கால் பதித்திருக்கிறார்.

பேரம் பேசும் ஐ பேக்… இதுக்கெதுக்கு இவ்வளவு கோடி..! புலம்பித்தீர்க்கும் தி.மு.க எம்.எல்.ஏ-கள்.!?


கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த செல்வி, தமிழரசு என பலரும் சீட்டு வாங்கித் தருவதாக பேரம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இதுபோக அந்தந்த மாவட்ட செயலாளர்களும், எம்.பிக்களும் ‘’நிச்சயம் உங்களுக்குத்தான் சீட்டு’’ என பலரிடமும் கொக்கிபோட்டு வருகின்றனர். நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளோ ‘’ யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்’’ என சோகப்பாட்டு இசைக்கின்றனர்.