அமமுகவிலிருந்து அதிமுக வந்த எம்எல்ஏவை அவமதித்த அதிமுகவினர்!

 

அமமுகவிலிருந்து அதிமுக வந்த எம்எல்ஏவை அவமதித்த அதிமுகவினர்!

முதல்வரை சந்திக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி புகார் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்து ஆய்வு மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு சிலையை திறந்து வைத்தார். புதுக்கோட்டை வந்த முதலமைச்சரை காண திருச்சி விமான நிலையத்திற்கு அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதியை அதிமுகவின் அவமதித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனையடுத்து அதிகாரிகளிடம் எம்எல்ஏ வாக்குவாதம் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமமுகவிலிருந்து அதிமுக வந்த எம்எல்ஏவை அவமதித்த அதிமுகவினர்!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்த எம்எல்ஏ ரத்தின சபாபதி, “முதல்வரை சந்திக்க அனைத்து எம்எல்ஏகளையும் அனுமதித்தார்கள். நான் தடுக்கப்பட்டேன். தற்போது எனது சிரிப்பை பதிலாக எடுத்துக் கொள்ளங்கள். உங்களின் கேள்விக்கு விரைவில் பதிலளிப்பேன். என்னை தடுத்து விட்டார்கள். நான் என்ன செய்ய… ? நான் தடுக்கப்பட்டு நின்றேன். ஒரு மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்தனர். என்ன காரணத்திற்காக என்னை முதல்வரை சந்திக்க விடாமல் தடுத்தார்கள் என்பது குறித்து தெரியவில்லை, இதுகுறித்து முதல்வரை நேரில் சந்தித்து முறையிடுவேன், அப்போதும் தீர்வு கிடைக்காவிட்டால் காலம் வரும்போது என் மனதில் உள்ள காயங்களை வெளிப்படுத்துவேன்” எனக் கூறினார்.