‘காலையில்’ ஐக்கியமான ராஜவர்மனுக்கு ‘மாலையில்’ ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த டிடிவி!

 

‘காலையில்’ ஐக்கியமான ராஜவர்மனுக்கு ‘மாலையில்’ ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த டிடிவி!

அதிமுக தலைமையைத் தன்னை வேட்பாளராக அறிவிக்காததால் அதிருப்தியில் அமமுகவில் இணைந்தார் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன். இதையடுத்து பேசிய அவர், அதிமுக இனி ஒருபோதும் ஜெயிக்காது; அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கடுமையாக விமர்சித்தார். அதேபோல ராஜேந்திர பாலாஜி எங்கு நின்றாலும் தோற்கடிப்பேன் என்று கூறியிருந்தார்.

‘காலையில்’ ஐக்கியமான ராஜவர்மனுக்கு ‘மாலையில்’ ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த டிடிவி!

தற்போது அமமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதில் எதிர்பாராத விதமாக டிடிவி அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து கோவில்பட்டியில் களமிறங்கிறார். 50 பேர் கொண்ட பட்டியலில் சாத்தூர் தொகுதியும் இடம்பெற்றுள்ளது. அந்தத் தொகுதியைக் காலையில் இணைந்த ராஜவர்மனுக்கு ஒதுக்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் டிடிவி தினகரன்.