‘ராஜேந்திர பாலாஜியால்’.. அமமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ!

 

‘ராஜேந்திர பாலாஜியால்’.. அமமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட 6 நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்ட முதற்கட்ட பட்டியல் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, நேற்று 171 வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அந்த பட்டியலில் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் இடம்பெறவில்லை. அதில் ஒருவர் தான் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன்.

‘ராஜேந்திர பாலாஜியால்’.. அமமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ராஜவர்மன் இன்று காலை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் மோதலில் ஈடுபட்டு வந்த ராஜவர்மன், தினகரனை சந்தித்தது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. இந்த நிலையில், டிடிவி தினகரன் முன்னிலையில் ராஜவர்மன் அமமுகவில் இணைந்து கொண்டார்.

‘ராஜேந்திர பாலாஜியால்’.. அமமுகவில் ஐக்கியமான அதிமுக எம்.எல்.ஏ!

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜவர்மன், கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை உழைப்பவர்களை வேட்பாளராக நிறுத்த வில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வில்லை. சசிகலாவுக்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதில் அளிப்பார்கள். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வர் துணை முதல்வரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என ஆவேசமாக பேசினார். அதிமுக எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.