Home தமிழகம் “திரைப்படங்களில் ஒழுக்கக்கேடான விஷயங்களை மட்டும் சொல்லிக்கொடுத்தவர் கமல்”

“திரைப்படங்களில் ஒழுக்கக்கேடான விஷயங்களை மட்டும் சொல்லிக்கொடுத்தவர் கமல்”

திரைப்பட நடிகர்கள் எந்தவித தியாக தன்மை செய்யாத நிலையில், உள்நோக்கத்தோடு மட்டுமே அரசியல் கட்சி தொடங்குகின்றனர் என எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொங்கம்பட்டி மற்றும் சொக்கம்பட்டி பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கினை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், மதுரை புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்.

மதுரை 2-வது தலைநகரமாக மாற்றப்படுமா? ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விளக்கம்

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “தங்கம் விலை ஒரு இலட்சம் ஆனாலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். நிர்வாக திறமையின் காரணமாக தமிழகத்தில் பெருமளவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் ஆயிரம் மினி கிளினிக் செயல்படுத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,

திரைப்பட நடிகர்கள் எந்தவித தியாகத்தையும் செய்யாத நிலையில்,உள்நோக்கத்தோடு மட்டுமே அரசியல் கட்சி தொடங்குகின்றனர். கமல்ஹாசன் திரைப்படங்களில் ஒழுக்கக்கேடான விஷயங்களை மட்டுமே சொல்லிக்கொடுத்தார். எம்.ஜிஆர் இடத்தினை எந்த திரைப்பட நடிகராலும் நிரப்ப முடியாது” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

பசுக்களுக்காக ரூ.1,500 கோடி: இது பாஜக அல்ல; காங்கிரஸ்

மக்கள் வரி பணத்தில் பசு மாட்டுக்கு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கிறது என்று பாஜகவினர் எதிர்க்கட்சியினர் குற்றம்சுமத்தி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு, பசு பாதுகாப்பிற்காக 3 ஆண்டுகளில் 1,500...

ராசிபுரத்தில் எல்.முருகன்; சேப்பாக்கத்தில் குஷ்பு : பாஜக வேட்பாளர் பட்டியல்?!

பாஜக போட்டியிடவுள்ள 20 தொகுதிகளின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள...

பெண் பார்க்க வந்தார்கள் -போலீசுக்கு போனார்கள் -கல்யாண ஏற்பாட்டில் நடந்த கலவரம்

ஒரு பெண்ணை திருமணம் பேசி முடித்து விட்டு ,திடீரென கல்யாணத்திற்கு மறுத்த மாப்பிளை வீட்டினர் மீது பெண் வீட்டார் போலீசில் புகார் கூறியுள்ளார்கள்.

“அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிக தொகுதிகள்”

அமித்ஷாவின் மிரட்டலால் பாஜகவுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு...
TopTamilNews