ஓபிஎஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

 

ஓபிஎஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சந்தித்து பேசினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓபிஎஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸுடன் கடந்தாண்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் இன்று ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்தார். தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சந்திப்பு நடத்தி வரும் சூழலில் ராமநாதபுரம் எம்எல்ஏ மணிகண்டன் சந்தித்தது அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸுடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு!

இதனிடையே செய்தியாளரை சந்தித்த வைத்தியலிங்கம், “அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் மீண்டும் அதிமுகவே ஆட்சியமைக்கும். குழப்பத்தால் ஆட்சி கலையாது” என்றார்.