திமுக எம்எல்ஏ-வின் செருப்பை கையில் எடுத்துச் சென்ற ஊராட்சி செயலாளர்… ஆம்பூரில் ஏற்பட்ட சர்ச்சை

திமுக எம்எல்ஏ-வின் செருப்பை கையில் எடுத்துச் சென்ற ஊராட்சி செயலாளர்… ஆம்பூரில் ஏற்பட்ட சர்ச்சை

திமுக எம்எல்ஏ ஊராட்சி செயலாளர் ஒருவரை தனது செருப்பை சுமந்து வரச் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் தான், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி சிறுவனை செருப்பை துடைக்கும்படி சொன்ன சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

திமுக எம்எல்ஏ-வின் செருப்பை கையில் எடுத்துச் சென்ற ஊராட்சி செயலாளர்… ஆம்பூரில் ஏற்பட்ட சர்ச்சை
திருப்பத்தூர் மாவட்டத்தில் சில வாரங்களாக நல்ல மழை பெய்து வருவதால் பாலாற்றில் நீர் வரத்து அதிகமாகியுள்ளது. இதையடுத்து, ஆம்பூர் அருகிலுள்ள பொன்னப்பள்ளி ஏரிக்கரையை பார்வையிட ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அங்கு சென்றுள்ளார்.

திமுக எம்எல்ஏ-வின் செருப்பை கையில் எடுத்துச் சென்ற ஊராட்சி செயலாளர்… ஆம்பூரில் ஏற்பட்ட சர்ச்சை
அப்போது, அங்கு சேறும் சகதியும் அதிகமாக இருந்ததால், எம்எல்ஏ தனது செருப்பை கழட்டி அவருடன் வந்த வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் என்பவரை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அதனால் ஊராட்சி செயலாளர் சங்கர் எம்எல்ஏ வில்வநாதன் செருப்பை எடுத்துக்கொண்டு அவர் பின் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.