“கட்சிசார்பற்ற எம்எல்ஏ-வாக எனது பணிகள் தொடரும்” : எம்எல்ஏ கு.க.செல்வம் ட்வீட்!

 

“கட்சிசார்பற்ற எம்எல்ஏ-வாக எனது பணிகள் தொடரும்” : எம்எல்ஏ கு.க.செல்வம் ட்வீட்!

திமுக மேலிடம் மீது இருந்த அதிருப்தி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் டெல்லியில் பாஜக மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டாவுடன் சந்திப்பு, கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து கு. க. செல்வத்தை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

“கட்சிசார்பற்ற எம்எல்ஏ-வாக எனது பணிகள் தொடரும்” : எம்எல்ஏ கு.க.செல்வம் ட்வீட்!

மேலும் அவரிடம் உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு கு.க. செல்வம் முறையாக பதிலளிக்கவில்லை என்று அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக முக. ஸ்டாலின் தெரிவித்தார்.

https://twitter.com/kuka_selvam/status/1294106432393162753

இந்நிலையில் ஆயி ரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு. க. செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் நலனுக்காக கட்சிசார்பற்ற MLA வாக எனது பணிகள் தொடரும்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.