“உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்னைக்கு காரணம்” : எம்எல்ஏ கு.க.செல்வம் பரபரப்பு பேட்டி!

“உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்னைக்கு காரணம்” : எம்எல்ஏ கு.க.செல்வம் பரபரப்பு  பேட்டி!

திமுக மேலிடம் மீது இருந்த அதிருப்தி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் டெல்லியில் பாஜக மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டாவுடன் சந்திப்பு, கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து கு. க. செல்வத்தை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு கு.க. செல்வம் முறையாக பதிலளிக்கவில்லை என்று அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக முக. ஸ்டாலின் தெரிவித்தார்.

“உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்னைக்கு காரணம்” : எம்எல்ஏ கு.க.செல்வம் பரபரப்பு  பேட்டி!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ கு. க. செல்வம், “என் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இல்லை. என்னை கட்சியிலிருந்து நீக்கியது நியாயமே இல்லை. அது ஒரு ஜனநாயகப் படுகொலை. தற்போது எந்த கட்சிக்கும் செல்ல நான் விரும்பவில்லை. கட்சி சார்பற்ற எம்எல்ஏவாக செயல்படுவேன். யார் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார்களோ அவர்கள் கட்சி சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவேன்” என்றார்.

“உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்னைக்கு காரணம்” : எம்எல்ஏ கு.க.செல்வம் பரபரப்பு  பேட்டி!

தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி ஸ்டாலின் தலையீடு தான் எனது பிரச்னைக்கு காரணம்.திமுகவில் அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்கள் எம்பிக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்” என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.