சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு நிச்சயம் – கருணாஸ் பேட்டி

 

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு நிச்சயம் – கருணாஸ் பேட்டி

சிறையில் இருக்கும் சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என எம்.எல்.ஏ கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை கூட்டணியிலும், முதல்வர் வேட்பாளர் பதவியிலும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதிமுகவிலோ எடப்பாடி முதல்வர் பதவிக்கு போட்டியிடுவாரா? ஓபிஎஸ் போட்டியிடுவாரா என்ற பெருங்குழப்பம் நீடிக்கிறது.

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு நிச்சயம் – கருணாஸ் பேட்டி

அண்மையில் அதிமுக தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி சென்ற போது ‘தமிழகத்தின் நிரந்தர முதல்வர்’ என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் சென்ற போது ‘அம்மா ஆசி பெற்ற வருங்கால முதல்வர்’ என்றும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இதன் மூலமாக அதிமுகவில் உள்கட்சி பிரச்னை நீடித்து வருகிறது என்பது தெளிவானது. இதனிடையே சிறையில் இருக்கும் சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகவிருப்பதால் அதிமுகவில் என்ன நடக்குமோ என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் சலசலப்பு நிச்சயம் – கருணாஸ் பேட்டி

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களுகு பேட்டியளித்த எம்.எல்.ஏ கருணாஸ், சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என தெரிவித்தார். மேலும், யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்ற நிலை தான் தமிழகத்தில் தற்போது நிலவுவதாகவும் அவர் கூறினார்.