திமுகவில் இருந்து எம்எல்ஏ கு.க.செல்வம் நிரந்தர நீக்கம்!

 

திமுகவில் இருந்து எம்எல்ஏ கு.க.செல்வம் நிரந்தர நீக்கம்!

ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் இருந்து எம்எல்ஏ கு.க.செல்வம் நிரந்தர நீக்கம்!

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு. க. செல்வம் கட்சி மீதான அதிருப்தியில் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார். அவர் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி தராததால் அவர் திமுக மேலிடம் மீது கடுப்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் டெல்லியில் பாஜக மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டாவுடன் சந்திப்பு, கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து கு. க. செல்வத்தை திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவரிடம் உங்களை ஏன் கட்சியிலிருந்து நீக்க கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு கு.க. செல்வம் முறையாக பதிலளிக்கவில்லை என்று திமுக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

திமுகவில் இருந்து எம்எல்ஏ கு.க.செல்வம் நிரந்தர நீக்கம்!

இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம் திமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க. செல்வம் கட்டுப்பாட்டை மீறி ,கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாத காரணத்தினால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார் என்று முக. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்