ஊரடங்கு போட தயாராகும் புதிய அரசு! 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

 

ஊரடங்கு போட தயாராகும் புதிய அரசு! 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. அக்கட்சியின் சார்பில் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஊரடங்கு போட தயாராகும் புதிய அரசு! 7ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

இந்நிலையில் காலையில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாலையில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். 7 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கவுள்ளதாகவும், இந்த அலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திமுக அரசு முழு வீச்சில் செயல்படும் என தெரிகிறது. அதன்படி, தமிழகத்தில் 23,310 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் 6291பேர் சென்னைவாசிகள். 20,062 பேஷண்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் ஒரேநாளில் 167 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.