ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

 

ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவியேற்க உள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு, வெற்றிகளை குவித்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போகும் ஸ்டாலினுக்கு நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றன.

ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

அந்த வகையில், ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ருந்தார். அதற்க்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

ஓபிஎஸ்க்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்ட மு.க.ஸ்டாலின், மாண்புமிகு ஓபிஎஸ் அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.