மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்

 

மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்

அக்.1 முதல் பள்ளிக்கு செல்லவிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் அக்.1ம் தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்தது. விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்லலாம் என்றும் இது கட்டாயம் அல்ல என்றும் அரசு தெரிவித்தது. அதனால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்

இந்த நிலையில் பள்ளிக்கு செல்லவிருக்கும் மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “10 11 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் அக்டோபர் 1ம் தேதி திறக்கப்படும் என்று அரசாணை வெளியிட்ட பிறகு 50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்கள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முடிவு செய்வார், பாடத் திட்டங்கள் பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்

வழிகாட்டுதல் மட்டுமே வழங்கப்படும், பெற்றோர் சம்மதம் அவசியம் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர்கள் போடுகிறது அதிமுக அரசு. பள்ளிகளைத் திறக்கிறோம் என்று அறிவித்துவிட்டு எதற்காக இவ்வளவு குழப்பங்கள். பல்வேறு துறைகளுக்கு இடையே முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி அரசாணை வெளியிட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. இப்படி அவசர வழியில் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்வது என்ன?

மாணவ மாணவியரின் எதிர்காலத்தில் கொரோனா ஒரு புறம் விளையாடுகிறது. அதிமுக அரசு இன்னொருபுறம் விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.