கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

 

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைபற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு பிறகு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் ஸ்டாலினுக்கும் தேநீர் விருந்து அளித்தார்.

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்னர், அங்கிருந்து கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தயாளு அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது, உணர்ச்சிவசப்பட்டு ஸ்டாலின் கண் கலங்கியது திமுக பிரமுகர்களின் மனதை உருக்கியது. இதையடுத்து, கோபாலபுரத்திலிருந்து சென்னை மெரினா கடற்கரைக்கு சென்ற ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!

அவருடன் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் புதிதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களும் உடன் சென்றனர். தற்போது சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு திராவிட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் அவரை வரவேற்ற நிலையில் பெரியாரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.